இந்தியா விளையாட்டு

நேற்றைய மேட்சுக்கு முன்னாடி அவர்ட்ட பேசுனேன்.. அதுதான் நான் சிறப்பா விளையாட காரணம்.. மனம்திறந்த விராட்கோலி..

Summary:

நேற்றைய போட்டிக்கு முன் ஏ.பி.டிவில்லியர்ஸ் என்கிட்ட ஒரு விஷயம் சொன்னார், அதுதான் தான் சிறப

நேற்றைய போட்டிக்கு முன் ஏ.பி.டிவில்லியர்ஸ் என்கிட்ட ஒரு விஷயம் சொன்னார், அதுதான் தான் சிறப்பாக விளையாட காரணம் என கூறியுள்ளார் விராட்கோலி.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் T20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நேற்றைய போட்டியில் மிக சிறப்பாக விளையாடினர்.

கடந்த சில போட்டிகளில் விராட்கோலி மிகவும் சொதப்பலாக விளையாடியநிலையில், அதுகுறித்து இந்திய அணி ரசிகர்கள் மிகவும் கவலையுடன் இருந்தனர். இந்நிலையில் நேற்றைய போட்டியில் விராட்கோலி 49 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசி இந்திய அணி வெற்றி பெற காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் தனது சிறப்பான ஆட்டம் குறித்து தற்போது பேசியுள்ள அவர், தனது ஆட்டம் குறித்து இந்திய அணி நிர்வாகம், தனது மனைவி அனுஸ்கா ஷர்மா பலரும் பேசினார்கள். அது எனக்கு மேலும் நம்பிக்கையூட்டியது. மேலும், நேற்றைய போட்டி தொடங்கும் முன்பு, ஏ.பி.டிவில்லியர்ஸிடம் சிறப்பு உரையாடல் மேற்கொண்டேன். பேட்டிங் பற்றி ஆலோசனைகளைப் பெற்றேன்.

அவர் என்னிடம் "பந்தை நன்றாக உற்று கவனி" என்று கூறினார். அதைத்தான் நான் செய்தேன். நேற்றைய போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினேன் என கூறியுள்ளார் விராட்கோலி..


Advertisement