இனி அமைச்சராக இருந்தாலும் சரி, MLA-வாக இருந்தாலும் சரி.... பாராபட்சமின்றி பதவி பறிப்பு! முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவால் ஆட்டம் காணும் அரசியல் களம்..!!!
தமிழக அரசியலில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அமைச்சர்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் மீது முறைகேடு தொடர்பான புகார்கள் வந்தால், உடனடியாக பதவி பறிக்கப்படும் என முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரேனும் செயல்பட்டால், அவர்களுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படாது என்ற தெளிவான அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
வேலூர் சம்பவத்துக்கு பிறகு அதிரடி
முன்னதாக, வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஒருவர், செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது. இந்த புகார் வெளியான உடனேயே, சம்பந்தப்பட்ட நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, கட்சியில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தி நிர்வாகிகளிடையே தெளிவாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
இந்த உத்தரவால் தவெக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் புதிய கட்டுப்பாடுகள் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அதிகாரத்தை பயன்படுத்தி தவறுகளில் ஈடுபடுவோருக்கு கட்சி தலைமையே கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
விஜயின் இந்த நிலைப்பாடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.