இப்போ 6 தொகுதி இடைத்தேர்தல்..! ஆளும்கட்சிக்கு 109-லிருந்து 108-ஆக குறைந்த தவெக பலம்... இடைத்தேர்தலில் நடக்கப்போகும் அதிரடி அரசியல் வியூகம்! பரபரக்கும் தமிழகம்...!!!



tamil-nadu-six-assembly-seats-vacant

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இதையடுத்து, தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 5 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், தற்போது கொளத்தூர் தொகுதியும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து ஆறு மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில், ஒரே நேரத்தில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் மாநில அரசியல் களம் மீண்டும் பரபரப்பை சந்திக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: ஜெயலலிதா சிகிச்சை பாணியிலே.. VS பாபுவுக்கும் வெளியிட்ட ஒரே மாதிரியான அறிக்கை! மருத்துவமனையில் நடந்த திகைப்பூட்டும் மர்மம்...!!!

ஏற்கனவே 5 தொகுதிகள் காலியாக இருந்தன

திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் ஏற்கனவே காலியாக அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவால், காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

108 ஆக குறைந்த தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் பலம்

வி.எஸ். பாபு மறைவால் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 109-லிருந்து 108 ஆகக் குறைந்துள்ளது. ஒரே நேரத்தில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை உருவாகியிருப்பது அரசியல் கட்சிகளிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

இடைத்தேர்தலால் சூடுபிடிக்கும் அரசியல் களம்

தமிழகம் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான இடைத்தேர்தல்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தல்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு முக்கியமான அரசியல் சவாலாக அமையும் என்பதால், தேர்தல் அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆறு தொகுதிகளிலும் போட்டியிடும் கட்சிகளின் வியூகங்கள், வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: இப்போ கொளத்தூர் தொகுதி காலி..! மீண்டும் களமிறங்குகிறாரா ஸ்டாலின்? இடைத்தேர்தலில் அடுத்தடுத்து நடக்கப்போகும் டுவிஸ்ட்...!!!