களை கட்டத் துவங்கும் குற்றாலம்; எம்எல்ஏக்கள் படையெடுப்பு!

களை கட்டத் துவங்கும் குற்றாலம்; எம்எல்ஏக்கள் படையெடுப்பு!



suspended MLAs in kuttralam

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் இதற்கான தீர்ப்பு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகலாம் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இந்தநிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து எம்எல்ஏ களையும் குற்றாலத்தில் தங்கியிருக்க இருக்குமாறு டிடிவி -தினகரன் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின்றன. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தவிர மேலும் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரையும் அவர்களோடு குற்றாலத்தில் தங்குமாறு தினகரன் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

suspended MLAs in kuttralam

இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள இசக்கி ஹைவியூ ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், சாத்தூர் சுப்பிரமணியன், கதிர்காமு, பழனியப்பன் ஆகிய 4 பேரும் வருகை தந்துள்ளனர்.

இது குறித்து தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறுகையில் "குற்றாலத்தில் இருக்குமாறு தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கு டிடிவி தினகரன் எந்தவித அறிவுறுத்தலும் வழங்கவில்லை. அவர்கள் அனைவரும் தாமிரபரணி புஷ்கரம் விழாவுக்காக குற்றாலம் வந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.