அரசியல்

ட்விட்டரில் தமிழக முதல்வர் குறித்து தரக்குறைவான விமர்சனம்!.. ஸ்டுடியோ ஓனர் அதிரடி கைது..!

Summary:

ட்விட்டரில் தமிழக முதல்வர் குறித்து தரக்குறைவான விமர்சனம்!.. ஸ்டுடியோ ஓனர் அதிரடி கைது..!

ட்விட்டரில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை தரக்குறைவாக விமர்சித்த ஸ்டுடியோ உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருபவர் விஜயராமன் (57). இவர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சிலறை தரக்குறைவாக விமர்சித்து பதிவிட்டு வந்துள்ளார்.

தி.மு.க-வை சேர்ந்த மாசிலாமணி இதனை கவனித்து வந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த மாசிலாமணி இவர் முன்னாள் நகரசபை உறுப்பினர், தி.மு.க-வின் தீவிர விசுவாசி அதனால் இவர் விஜயராமன் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் விசாரணை மேற்கொண்டு சோதனை செய்தபோது விஜயராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சிலரை தரக்குறைவாக திட்டி பதிவிட்டு இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஸ்டூடியோ உரிமையாளர் விஜயராகவன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.


Advertisement