"என்னை போன்றவர் தான் திருமாவளவனும்.." ஓபனாக பேசிய அன்புமணி.!



pmk anbumani about vck thiruma in kv kuppam campaign

வேலூர் மாவட்டத்தின் கே.வி.குப்பம் தொகுதியில் NDA கூட்டணி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவரான பூவை ஜகன் மூர்த்தி போட்டியிடுகிறார். ஏற்கனவே, அதே தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் அவரை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது பேசிய அவர், "திமுகவின் சூழ்ச்சி தான் ஜாதி சண்டைகளுக்கு காரணம். சமீபத்தில் திருமாவளவன் பேசுவையில், 'ஸ்டாலின் கே வி குப்பம் தொகுதியில் தன்னை போட்டியிட சொல்லி வற்புறுத்தியதாகவும், அதனை திருமாவளவன் ஏற்க மறுத்து அங்கு ஏற்கனவே என்னை போல ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக குரல் கொடுக்கும் ஜகன் மூர்த்தி போட்டியிடுகிறார். 

எனவே அவருக்கு எதிராக விசிக போட்டியிடாது' என்று தெரிவித்ததாக சொல்லி இருந்தார்." திருமாவளவனின் இந்த முடிவை நான் மனதார பாராட்டுகிறேன். எனது மனநிலையும் இதுதான்.

இதையும் படிங்க: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.. நெருக்கடியில் சிக்கிய டிடிவி தினகரன், ஓபிஎஸ்.!

pmk

எனக்கும் அவருக்கும் கட்சி வேறுபாடுகள், கருத்து, கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாங்கள் இருவருமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

செயல்பாடுகள் ஒன்றுதான். பட்டியலின மக்களையும், வன்னியர்களையும் சண்டையிட வைப்பது திமுகவின் சூழ்ச்சி தான் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. இந்த மண்ணின் மைந்தர்களான நாம் ஒன்றாக சேர்ந்து படித்து வேலைக்கு சென்று தன்மானத்துடன் வாழ வேண்டும். திமுகவின் சூழ்ச்சியில் மக்களாகிய நீங்கள் விழுந்து விடக்கூடாது.

அரசியல், அதிகாரம் நமக்கு வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் இவர்களுக்கு அடிமையாக நாம் இருக்கப் போகிறோம்? எல்லோரும் ஒன்று சேர்ந்து திமுகவின் சூழ்ச்சியை முறியடிப்போம்." என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #Breaking: காசு கொடுத்தா காதுல விசில ஊதி அனுப்புங்க.. விஜய் அனல்பறக்க பேச்சு.!