BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.. நெருக்கடியில் சிக்கிய டிடிவி தினகரன், ஓபிஎஸ்.!
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று சென்னை அடையாறில் அமைந்துள்ள அமமுக பொதுச் செயலாளர் தினகரனின் இல்லத்தில் அவரை சந்தித்து, 2 மணி நேரத்திற்கு மேலாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இடம்பெற்று இருந்தனர்.
திடீரென அவர்கள் இருவரும் இந்த கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் இருவரும் கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறு பரிசீலனை செய்ய சொல்லி கோரிக்கை அமித்ஷா விடுப்பதாக கூறப்படுகிறது.

மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று அவர்களை தமிழக பாஜக தரப்பினரும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. நேற்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிலையில், இன்று அண்ணாமலை தினகரனை சந்தித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அவசரப்பட்ட ஓ.பி.எஸ்.? மேலிடம் போட்ட உத்தரவு.! குழம்பி நிற்கும் நேரத்தில்., காய் நகர்த்தும்.. திமுக.!
சி.எம் வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஏற்க மறுத்து தான் ஓபிஎஸ்-சும், டிடிவியும் கூட்டணியில் இருந்து விலகினர். இந்த நிலையில், தமிழக நலனுக்காக எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்று கூட்டணிக்கு வர வேண்டும் என அண்ணாமலை அவர்களிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "எடப்பாடி பழனிச்சாமியை அம்மாவின் ஆத்மா மன்னிக்காது... " டி.டி.வி தினகரன் பேட்டி.!!