ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
"எடப்பாடி பழனிச்சாமியை அம்மாவின் ஆத்மா மன்னிக்காது... " டி.டி.வி தினகரன் பேட்டி.!!
எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வர முடியாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர் உதயநிதி ஸ்டாலின் உண்மையை தான் சொல்லியிருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக மற்றும் பாஜகயிடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியிலிருந்த அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இந்த முறை அதிமுக மற்றும் பாஜக கூட்டணியிலிருந்து விலகினர். மேலும் அமமுக கூட்டணியில் தொடர வேண்டுமென்றால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கூடாது என டிடிவி தினகரன் நிபந்தனை வைத்திருக்கிறார்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அதிமுக வெற்றி பெறாது என தெரிவித்துள்ளார். அதிமுக கட்சியிலிருக்கும் நிர்வாகிகளும் எடப்பாடி என்ற ஒற்றை மனிதருக்காக காவடி தூக்குகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை அம்மாவின் ஆத்மா ஒருபோதும் மன்னிக்காது எனவும் தெரிவித்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் கூறியது போல எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அதிமுகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஐயா நீங்க இருந்தா மட்டும் போதும் எங்க வேலை ஈசியா முடிஞ்சிரும்..." எடப்பாடி பழனிச்சாமியை கலாய்த்த துணை முதல்வர்.!!
மேலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அரசியல் காரணங்களுக்காக கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தனக்கு பிடிக்காதவர்களை கட்சியிலிருந்து நீக்கி சர்வதிகார ஆட்சி செய்து வருவதாக குற்றம் சாட்டினார். நயினார் நாகேந்திரன் கூட்டணியை கையாளும் விதம் சரியில்லை என்று கூறினேன். மற்றபடி அவர் என்னை நண்பனாக எப்போதும் சந்திக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "எடப்பாடி பழனிச்சாமியை அசைத்துப் பார்க்க நினைப்பவர்களுக்கு தோல்விதான் பரிசு... " ஆர்.பி உதயகுமார் பரபரப்பு பேட்டி.!!