ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
"எடப்பாடி பழனிச்சாமியை அசைத்துப் பார்க்க நினைப்பவர்களுக்கு தோல்விதான் பரிசு... " ஆர்.பி உதயகுமார் பரபரப்பு பேட்டி.!!
அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த வாரம் நடத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அதிமுக கட்சியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 10 நாட்களுக்குள் அதிமுக ஒன்றிணைய வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் கெடு விதித்திருந்தார். இந்நிலையில் செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளிலிருந்து விடுவிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக வேறொரு நபரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் கூட்டணியில் இணைய தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இன்னொரு புறம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடருமா.? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிச்சாமி தன் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக உணர்ச்சிப்பூர்வமாக கூறியிருக்கிறார். மேலும் அதிமுக கூட்டணி மற்றும் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த நினைக்கும் ஆளுங்கட்சியினரின் செயல் எடுபடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கட்சியை ராணுவ கட்டுப்பாட்டுடன் எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "எள்ளு வய பூக்களையே..." அதிமுக - வில் மீண்டும் விரிசல்.!! மாஜி அமைச்சர் பிரஸ் மீட் அறிவிப்பு.!!
தமிழகத்திற்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் உணவருந்தினார். மேலும் தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் ஆட்சியமைக்கும் என உறுதிப்பட கூறிவிட்டுச் சென்றதை சுட்டிக்காட்டினார் ஆர்.பி உதயகுமார். எடப்பாடி பழனிச்சாமியை அசைத்துப் பார்க்க நினைப்பவர்களுக்கு தமிழக மக்கள் தோல்வியை பரிசாக கொடுப்பார்கள் எனக் கூறினார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மாவின் ஆசியுடன் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "ஐயா நீங்க இருந்தா மட்டும் போதும் எங்க வேலை ஈசியா முடிஞ்சிரும்..." எடப்பாடி பழனிச்சாமியை கலாய்த்த துணை முதல்வர்.!!