இன்ப அதிர்ச்சி... 234 சட்டமன்ற தொகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.828. 36 கோடி ஒதுக்கீடு....! அதிரடி காட்டும் முதல்வர் விஜய்!!!



tamil-nadu-constituency-development-fund-released

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.828.36 கோடி நிதியை மாநில அரசு விடுவித்துள்ளது. இதுதொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஆண்டுக்கு ரூ.3.54 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

234 தொகுதிகளுக்கும் தலா ரூ.3.54 கோடி

தொகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, நிலுவையில் உள்ள தொகுதி மேம்பாட்டுப் பணிகளை தாமதமின்றி மேற்கொள்ளும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் அலுவலகத்தை மாற்ற கோடி கோடியாய் ஆகும் செலவு! எத்தன்னை கோடி தெரியுமா? கசிந்த தகவல்!!!

மக்களின் அன்றாட தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, உள்ளூர் அளவில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கும் இந்த நிதியை பயன்படுத்த முடியும். இதனால், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சில அடிப்படை வசதி பணிகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம்

தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.828.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், சாலை வசதி, குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்தந்த தொகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பணிகள் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் தேவைகளுக்கு விரைவான தீர்வு

பொதுமக்களின் உடனடி தேவைகளை கருத்தில் கொண்டு தொகுதி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுவதால், அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய இது உதவும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அடுத்தகட்டமாக வேகமெடுக்கும் என தெரிகிறது.

 

இதையும் படிங்க: திறந்த போட்டி டெண்டர்..... ஒரே நாளில் ரூ.9 லட்சம் மிச்சம்..! சென்னை மாநகராட்சி டெண்டரில் இறங்கி அடித்த CM விஜய்.... ஆடிப்போன நிறுவனங்கள்!!!