திறந்த போட்டி டெண்டர்..... ஒரே நாளில் ரூ.9 லட்சம் மிச்சம்..! சென்னை மாநகராட்சி டெண்டரில் இறங்கி அடித்த CM விஜய்.... ஆடிப்போன நிறுவனங்கள்!!!



greater-chennai-corporation-open-tender-system-savings

சென்னை மாநகராட்சியில் திறந்த போட்டி டெண்டர் முறை அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தத் தொகைகள் கணிசமாகக் குறைந்து வரிப்பணத்தில் அதிகளவு சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய நடைமுறை மூலம் வெளிப்படைத்தன்மையும் போட்டியும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

டெண்டர்களில் அதிகரித்த போட்டி

அரசின் வழிகாட்டுதலின்படி, வரையறுக்கப்பட்ட டெண்டர் முறைக்குப் பதிலாக திறந்த போட்டி முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் மாநகராட்சி மதிப்பீட்டை விட 25 முதல் 30 சதவீதம் வரை குறைவான தொகையில் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இப்படி ஒரு கணக்கா? சைலண்டாக மேயர் பிரியாவுக்கு சம்பவம் செய்த முதல்வர் விஜய்..! ஆடிப்போன சென்னை மாநகராட்சி.. வெளியான அதிரடி உத்தரவு.!!!

சமீபத்தில் பேருந்து வழித்தட சாலை வெட்டுப் பகுதிகளை சீரமைப்பதற்காக வெளியிடப்பட்ட டெண்டர்களில் இந்த மாற்றம் எதிரொலித்தது. அம்பத்தூர் மண்டலத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பணிக்கு 9 நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், 25.9 சதவீதம் குறைவாகக் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ரூ.17 லட்சத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரே பணியில் சுமார் ரூ.9 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களிலும் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் போட்டியிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தரத்தில் சமரசம் கூடாது

சென்னை மாநகர ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் ராமாராவ் கூறுகையில், கடந்த காலங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பணிகள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும், தற்போது போட்டி அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில், 35 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்த விலையில் ஒப்பந்தம் பெறும் நிறுவனங்கள் பணித் தரத்தில் சமரசம் செய்யக்கூடும் என்பதால், மாநகராட்சி பொறியாளர்கள் கள ஆய்வு மூலம் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தனி ஆய்வுக்கு உட்படும் குறைந்த விலை டெண்டர்கள்

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திட்ட மதிப்பீட்டை விட 30 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்த தொகையில் பெறப்படும் டெண்டர் விண்ணப்பங்கள் அனைத்தும் தனி ஆய்வு மற்றும் கூடுதல் பரிசீலனைக்குப் பிறகே இறுதி செய்யப்படுகின்றன என்றனர். அண்மையில் வெளியிடப்பட்ட சுமார் 150 சிறிய பணிகளுக்கான டெண்டர்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாகவும், சென்னை மாநகராட்சி பணிகளில் வரிப்பணச் சேமிப்புடன் தரமான உள்கட்டமைப்பையும் உறுதி செய்வதே இலக்கு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: திமுக ஆட்சி இறுதியில் அவசரமாக அறிவிக்கப்பட்ட டெண்டர்கள்...! கட்டம் கட்டமாக ரத்து செய்யும் CM விஜய்! பகீர் கிளப்பும் பின்னணி உண்மை.!!!