Video : விசாரணை முடிந்து மனநிம்மதியோடு வெளியே வந்த விஜய்! ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அனல் பறக்கும் பதிவு! உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்!!!
கரூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்து தொடர்பான விசாரணை அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் பிரசார கூட்ட நெரிசல் விபத்து
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கை CBI அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மூன்றாவது முறையாக விஜய் ஆஜர்
இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் முன் ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: BREAKING: திடீர் திருப்பம்! விஜய்யின் மாஸ்டர் பிளான்! டெல்லி பயணத்தில் அதிகரிக்கும் பரபரப்பு!!!
பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை
அந்த நாள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகக் கட்சித் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இந்த வழக்கில் நடைபெறும் ஒவ்வொரு விசாரணையும் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
சிபிஐ அலுவலகத்தில் விசாரணை முடிந்த பின் வெளியேறும் விஜய்யின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனிடையே கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அதிகாரத்தாலும் அவதூறுகளாலும் தங்களை முடக்க முயன்றவர்கள் மக்கள் ஆதரவின் முன்னால் தோல்வியடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தொண்டர்களுக்கு உற்சாகம்
டெல்லியில் தொடங்கிய இந்தப் பயணம் விரைவில் புனித ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டதாகவும், இனி ஒவ்வொரு ஊரிலும் தலைவரின் மக்கள் சந்திப்பு எழுச்சியுடன் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாற்றத்திற்கான மக்களின் கனவு நிறைவேற வேண்டும் என்றும் எளிய மக்களுக்கான மக்களாட்சி மலர வேண்டும் என்றும் அவர் கூறிய இந்த செய்தி தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தொடங்கிய பிரச்சாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டது.
அதிகாரத்தால் நம்மை முடக்க நினைத்தார்கள், அவதூறுகளால் நம்மை அழிக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன் இவை அனைத்தும் தோற்றுப் போனது. இனி நம்மை முடக்க நினைத்த அதே… pic.twitter.com/81Ums8MFT3
— Aadhav Arjuna (@AadhavArjuna) March 15, 2026