BREAKING: திடீர் திருப்பம்! விஜய்யின் மாஸ்டர் பிளான்! டெல்லி பயணத்தில் அதிகரிக்கும் பரபரப்பு!!!
தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் இன்று சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளார்.
கரூர் கூட்டநெரிசல் பின்னணி
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது CBI விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: விஜய் தலைமையிலான வெற்றிக்கழக அலுவலகத்தின் முன் போலீஸ் படை குவியல்! திடீர் பரபரப்பு.!!!
சிபிஐ விசாரணை நடவடிக்கைகள்
வழக்கு தொடர்பாக தவெக நிர்வாகிகள் பலரை சிபிஐ டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்தியது. சமீபத்தில் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் பயன்படுத்திய பிரச்சார பேருந்தை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பேருந்து ஓட்டுநரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், சிபிஐ சார்பில் தவெக தலைவர் விஜய்க்கு வரும் 12ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து, கரூர் கூட்டநெரிசல் வழக்கு தொடர்பாக விஜய் நேரில் ஆஜர் ஆக இன்று டெல்லி செல்கிறார்.
டெல்லி பயணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட விஜய்க்கு விமான நிலையம் முதல் சிபிஐ அலுவலகம் வரை கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரசிகர்கள் கூடிவிடாமல் இருக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். அங்கு 2 நாட்கள் விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விசாரணையை முடித்து நாளை மாலை விஜய் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 41 பேர் உயிரிழந்த இந்த சம்பவத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், கரூர் கூட்டநெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை முக்கிய திருப்பத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: தள்ளுமுள்ளாகி பரபரப்பு.... விஜய் கட்சிக்குள் வெடித்தது சண்டை.!!!