ஐயோ... கடவுளே! இப்படி ஆகிடுச்சே..! பணத்தை பாதுகாப்பாக வைக்க நினைத்த விவசாயி...இறுதியில் 5 லட்சத்தை பணத்தை பார்த்ததும் கண்ணீர் விட்ட கொடூரம்!!!
நிலத்தை விற்று கிடைத்த ரூ.5 லட்சத்தை பாதுகாப்பாக வைத்திருக்க நினைத்த விவசாயி மங்கிலால், குடும்பத்தினருக்குக் கூட தெரியாமல் அதை வயலில் புதைத்து வைத்தார். வீட்டில் வைத்தால் திருட்டு போகலாம், மகன் செலவு செய்து விடலாம் என்ற அச்சமே இதற்கு காரணம். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவர் செய்த செயல் அவருக்கே பெரிய சிக்கலாக மாறியது.
வயலில் பணத்தை புதைத்த விவசாயி
நிலம் விற்றதன் மூலம் கிடைத்த ரூ.5 லட்சம் பணத்தை வீட்டில் வைத்திருக்க மங்கிலால் விரும்பவில்லை. இதையடுத்து, வயலில் ஒரு குழி தோண்டி பணத்தை அதில் வைத்து மூடி மறைத்துள்ளார். பணம் புதைத்த இடம் குறித்து குடும்பத்தினரிடமும் அவர் எதுவும் கூறவில்லை.
இதையும் படிங்க: பெண்களுக்கு மாதம் ரூ 2,500...! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!!
சில காலத்துக்குப் பிறகு வீட்டில் அறை கட்டுவதற்குப் பணம் தேவைப்பட்டது. அப்போது வயலில் புதைத்து வைத்த பணத்தை எடுக்கச் சென்ற மங்கிலாலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பணத்தை எந்த இடத்தில் புதைத்தார் என்பது அவருக்கே நினைவில் இல்லை.
பல நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை
வயலின் பல பகுதிகளில் தேடியும் பணம் கிடைக்கவில்லை. ஒரு இடத்தில் புதைத்ததாக நினைத்து தோண்டிப் பார்த்தால் அங்கு எதுவும் இருக்காது. இப்படியாக பல நாட்கள் தேடியும் பலன் கிடைக்காததால், மங்கிலால் பணத்தை மீட்க முடியாமல் தவித்தார்.
உழவின்போது வெளியே வந்த பணப்பை
இதற்கிடையில் மழைக்காலம் தொடங்கியது. வயலில் உழவு மற்றும் விதைப்புப் பணிகள் நடைபெற்றபோது, மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த பணப்பை எதிர்பாராதவிதமாக வெளியே வந்தது. இதைப் பார்த்த மங்கிலால் அவசரமாக அதை எடுத்துத் திறந்தார்.
அப்போது பணப்பையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளை கரையான்கள் அரித்துத் தின்றிருந்தது தெரியவந்தது. பெரும்பாலான நோட்டுகள் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத துண்டுகளாக மட்டுமே இருந்தன. பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வயலில் புதைத்த தொகை, இறுதியில் மண்ணுக்குள்ளேயே அழிந்துபோனது.
இதையும் படிங்க: நீயும் ஒரு பொண்ணு தானே? வேலைக்காரப் பெண்ணை கொடூரமாக தாக்கிய திமிரு பிடித்த பெண்!!!