100 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ₹2.79 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்... வங்கி கணக்கும் முடக்கம்!



100 Day Worker Receives ₹2.79 Crore GST Notice, Bank Account Frozen

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வரும் பெண்மணிக்கு ₹2.79 கோடி ஜிஎஸ்டி (GST) வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண்மணியின் பெயரில் எம்.ஆர். டிரேடர்ஸ் (MR Traders) என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த நிறுவனம் ஜிஎஸ்டி வரியை செலுத்தாததால் மொத்தம் ₹2.79 கோடி நிலுவை வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் ஜிஎஸ்டி துறையிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நோட்டீஸை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்மணி, தாம் எந்த நிறுவனத்தையும் நடத்தவில்லை என்றும், 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

Jolarpet

தனது பெயர் மற்றும் ஆவணங்கள் எவ்வாறு ஒரு நிறுவனத்தின் பதிவுக்கு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து தனக்கு எந்தத் தகவலும் இல்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "அங்கிள் ப்ளீஸ் வேண்டாம்" அலறிய 6 ஆம் வகுப்பு சிறுமி.. அடங்காத பாக்யராஜுக்கு போக்ஸோ தண்டனை.! 

இதற்கிடையில், ஜிஎஸ்டி நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 100 நாள் வேலை மூலம் கிடைத்த சம்பளத் தொகையைக் கூட எடுக்க முடியாமல் பெண்மணி கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்த சம்பவம் அடையாளத் திருட்டு, போலி நிறுவன பதிவு அல்லது ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தி, உண்மையை கண்டறிந்து பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: இத பார்க்கவே சகிக்கல....இத எப்புடி சாப்புடுறது! அரைகுறை ஆடையுடன் சிப்ஸ் கிடங்கில் உருளும் இளைஞர்! அதிர்ச்சி வீடியோ..!!!