பிரம்மாண்ட தங்க விநாயகர் சிலை! 48 கிலோ எடை... 24 கேரட் தங்க முலாம்! 3.8 லட்சம் வைரங்கள்.... ஹைதராபாத்தை பிரமிக்க வைத்த விநாயகரின் வீடியோ...!!!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹைதராபாத் பேகம்பஜார் ஃபீல்ட் கானாவில் பிரம்மாண்டமான தங்க விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. 48 கிலோ எடை கொண்ட இந்த சிலை பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சிலையை காண ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
24 கேரட் தங்க முலாம்; லட்சக்கணக்கான வைரங்கள்
கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. மேலும், 3.8 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்க வைரங்கள் கொண்டு சிலை நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலையின் தோற்றம் மேலும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
இதையும் படிங்க: விஜய்யின் சட்டமன்ற ஆக்ஷன் முதல் கில்லி கபடி வரை.. சென்னையில் அசத்தும் விநாயகர் சிலைகள்! வைரலாகும் வீடியோ..!!!
எட்டு மாத உழைப்பில் உருவான சிலை
இந்த பிரம்மாண்ட சிலையை உருவாக்க எட்டு கைதேர்ந்த சிற்பிகள் மற்றும் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். சுமார் எட்டு மாதங்கள் தொடர்ந்து மேற்கொண்ட பணியின் மூலம் கலைநயம் மிக்க இந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பேகம்பஜார் பகுதியில் Golden Ganesha முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளது.
బేగంబజార్లో 48 కిలోల బంగారు గణేశుడు...
వినాయక చవితి సందర్భంగా హైదరాబాద్ బేగంబజార్ ఫీల్ఖానాలో 48 కిలోల గణేశుడి విగ్రహం ప్రత్యేక ఆకర్షణగా నిలిచింది.
24 క్యారెట్ల బంగారు పూతతో పాటు 3.8 లక్షలకు పైగా అమెరికన్ డైమండ్స్తో విగ్రహాన్ని అలంకరించారు. ఎనిమిది మంది నిపుణులైన కళాకారులు ఎనిమిది నెలల పాటు శ్రమించి ఈ విగ్రహాన్ని రూపొందించారు.
— ఉదయం (@udayamdigital) September 14, 2026
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. பூஜை செய்வது எப்படி? நல்ல நேரம், வழிபாட்டு முறைகள் இதோ!