விடுதியில் தூங்கிய 10 ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த அதிர்ச்சி! நள்ளிரவில் பெற்றோர்கு போன் போட்டு காலையில் சடலமாக காட்டிய பள்ளி நிர்வாகம்... கதறும் குடும்பத்தினர்..!!!



telangana-schoolgirl-dies-snakebite-hostel

தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதியில் பாம்பு கடித்ததில் 10ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். ராகவாபூரில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா விடுதியில் தங்கிப் படித்து வந்த லேசியா என்ற மாணவிக்கு புதன்கிழமை நள்ளிரவு இந்த பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மாணவியின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

விடுதியில் தூங்கிய மாணவிக்கு பாம்பு கடி

சித்திபேட்டை மாவட்டம் குடிகண்டுலா கிராமத்தைச் சேர்ந்த லேசியா, ராகவாபூரில் உள்ள கஸ்தூர்பா காந்தி அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கியிருந்த அவர், தசரா விடுமுறையை முடித்துவிட்டு சமீபத்தில்தான் பள்ளிக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில், புதன்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது அவரைப் பாம்பு கடித்துள்ளதது.

இதையும் படிங்க: 7 ஆண்டுகள் எந்த அசைவும் இல்லாமல் கோமாவில் இருந்த காதலி! மரண போராட்டத்தில்..... கதறி அழுது கணவன் சொன்ன அந்த ஒரு விஷயம்! இறுதியில் நடந்த மெடிக்கல் மிராக்கிள்...!!!

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை

மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளி ஊழியர்கள் அவரது பெற்றோருக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வியாழக்கிழமை அதிகாலை விடுதிக்கு வந்த பெற்றோர், லேசியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதை அறிந்து சித்திபேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு மாணவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி நிர்வாகம் மீது உறவினர்கள் புகார்

மாணவியின் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று உறவினர்களும் கிராம மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், மாணவியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். விடுதியில் பாம்பு எவ்வாறு நுழைந்தது, மாணவிக்கு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் விசாரணையில் தெரியவரும்.

 

இதையும் படிங்க: வெறும் 200 ரூபாய்க்கு ₹50 லட்சம் மதிப்பில் கிடைத்த பிரம்மாண்ட ஃபார்ச்சூனர் கார்! பாட்டியால் பேரனுக்கு கிடைத்த அதிஷ்ட பரிசு..!!!