#JUSTIN: பட்டப்பகலில் துணிகரம்.. பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையின் 16 சவரன் நகைகள் கொள்ளை.. தூத்துக்குடியில் ஷாக்.! 



Shocking Daylight Robbery: Teacher's 16 Sovereigns of Gold Snatched Inside School in Thoothukudi

ஆசிரியை அணிந்திருந்த 16 சவரன் நகைகள் திருடப்பட்டன. 

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி: 

Thoothukudi School Teacher: தூத்துக்குடி மாநகராட்சி, அத்திமரப்பட்டியில், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் ஆசிரியையாக சாந்தி என்பவர் வேலை பார்த்து வருகிறார். 

இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் கொடூரம்.. ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. தலைநகரில் அதிர்ச்சி.!

நகைகள் கொள்ளை: 

இதனிடையே, இன்று வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டு இருந்த நிலையில், ஆசிரியை சாந்தியின் வகுப்பறைக்கு வந்த மர்ம நபர், அவர் அணிந்திருந்த 16 சவரன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

Crime news

விசாரணை: 

இதனால் அலறிய ஆசிரியையின் சத்தம் கேட்டு வந்த சகஆசிரியர்கள் திருடனை விரட்டிச் சென்றபோது, அவர் அருகில் இருக்கும் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து மறைந்து இருக்கிறார். பின் இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நேரில் வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

டிரோன் உதவி: 

நிகழ்விடத்தில் இருக்கும் சிசிடிவி கேமிராவை ஆராய்ந்து வரும் காவல்துறையினர், தோட்டத்துக்குள் புகுந்த கொள்ளையன் தப்பாமல் இருக்க டிரோன் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: பள்ளி கழிவறையில் ஆசிரியையிடம் 16 சவரன் நகை பறிப்பு... ட்ரோன் கேமராவுடன் கொள்ளையனை தேடும் போலீஸ்!