பள்ளி கழிவறையில் ஆசிரியையிடம் 16 சவரன் நகை பறிப்பு... ட்ரோன் கேமராவுடன் கொள்ளையனை தேடும் போலீஸ்!



16 Sovereign Gold Snatched From Teacher Inside School Toilet

தூத்துக்குடி அருகே உள்ள மாநகராட்சி பள்ளியில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்குள் துணிகரமாக புகுந்த மர்மநபர், ஆசிரியையிடம் இருந்த 16 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். பள்ளி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Tuticorin

கொள்ளையன் தூத்துக்குடி அந்திமரப்பட்டி பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதியை போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். மேலும், ட்ரோன் கேமரா உதவியுடன் வாழைத்தோட்டம் முழுவதும் தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: BREAKING: சிவகங்கை எம். பி கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! பெரும் பரபரப்பு..!!

பட்டப்பகலில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையிடம் 16 சவரன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்மநபரை விரைவில் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மன்னார்குடி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4 மாணவர்கள் மீது கார் மோதி உயிரிழப்பு! கதறிதுடிக்கும் பெற்றோர்கள்...!!!!