மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
காலியாகிறது நாதக கூடாரம்.. முக ஸ்டாலின் முன்னிலையில் 3000 பேர் திமுகவில் இணைவு.!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபகாலமாக பெரியாருக்கு எதிரான கருத்துக்களை முன்னெடுத்து இருக்கிறார். இந்த விஷயம் மாநில அளவில் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கி, அவருக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று, சீமானின் நீலாங்கரை வீட்டினை பெரியாரிய ஆதரவாளர்கள் முற்றுகையிடம்வும் முயன்றனர்.
சீமானுக்கு எதிராக உட்கட்சியில் எதிர்ப்பு குரல்
அதற்கு முன்னதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூறி, பல்வேறு மாவட்ட செயலாளர்கள் தங்களின் பொறுப்புகளில் இருந்து விலகி சீமானுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து இருந்தனர். இது எதையும் கண்டுகொள்ளாத அக்கட்சியின் தலைமை, தனது செயல்பாடுகளில் உறுதியாக இருந்தது.
இதையும் படிங்க: கடன்கார, குடிகார மாநிலமாக தமிழ்நாடு - அண்ணாமலை பேச்சு.!
திராவிட கருத்தால் மற்றும் கழக அரசின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டு நாம் தமிழர் கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் நம் கழகத்தில் இணைத்து கொள்வதையொட்டி #Rip_NTK என்ற ஹேஷ்டாக்கில் சீமானின் கூடாரம் காலியாவதை வெளிப்படுத்தும் விதமாக ட்ரெண்ட் செய்திடுவோம் https://t.co/OXXdr8gVrC
— ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) January 24, 2025
திமுகவில் இணைகின்றனர்
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில், இன்று 3 ஆயிரத்திற்கும் அதிகமான நாம் தமிழர் கட்சியினர், தங்களை திமுகவில் இணைத்துக்கொள்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் 8 மாவட்ட அளவிலான நிர்வாகிகள், பல கிளை செயலாளர்கள் உட்பட 3000 நாம் தமிழர் கட்சியினர், தங்களை திமுகவில் இணைகின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலய வளாகத்தில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு தலைகுனி - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.!