ஐயோ... ஒரு நொடியில் உயிர் தப்பினாரா? நடிகர் கிரண் ராஜை கீழே தள்ளிய சிங்கம்! அதிர்ச்சி வீடியோ..!!!
ரொம்ப கஷ்டப்பட்டேன்.... தம்பி விஜய் சொன்னது உண்மைதான்! தாக்குதலில் உடைந்த தாடை..! 10 பேருடன் அந்த ஒரு பானையில் தான் சிறுநீர்... சிறையில் நடந்த கொடூரம்.! வீடியோவுடன் ஸ்டாலின் அளித்த அதிரடி பதில்..!!!
மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அனுபவித்த கொடுமைகள் குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கமாக விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் அவரது சிறை அனுபவம் மற்றும் தாடை உடைந்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த காணொளியை அவர் வெளியிட்டுள்ளார். தன்னை இழிவுபடுத்த முயன்றாலும், வரலாற்றை மாற்ற முடியாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிசா காலத்தில் நடந்த கைது
1976-ம் ஆண்டு அவசரநிலை காலத்தில், மிசா சட்டத்துக்கு எதிராக கருணாநிதி குரல் கொடுத்ததைத் தொடர்ந்து திமுக ஆட்சி கலைக்கப்பட்டதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி கலைக்கப்பட்ட உடனேயே தன்னை கைது செய்ய காவல்துறையினர் கோபாலபுரம் வீட்டுக்கு வந்ததாகவும், அப்போது தான் பிரசாரத்தில் இருந்ததால் மறுநாள் கலைஞர் மூலம் காவல்துறையிடம் சென்று சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் உடல்மொழிக்கு ஸ்டாலின் கொடுத்த தரமான பதிலடி! அடுத்த சாரி எப்போ? CM விஜய்யை கடுமையாக சாடிய ப்ளூ சட்டை மாறன்....!!!
அதன்பின் சிறையில் அடைக்கப்பட்ட விதம் முதல் அங்கு எதிர்கொண்ட கொடுமைகள் வரை பல்வேறு தகவல்களை அவர் நினைவுகூர்ந்துள்ளார். சிறிய அறையில் பலருடன் அடைத்து வைக்கப்பட்டதுடன், அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
தாக்குதலில் உடைந்த தாடை; இன்றும் இருக்கும் தழும்புகள்
சிறை அனுபவத்தைப் பற்றி பேசிய ஸ்டாலின், தொழுநோயாளிகள் இருந்த பகுதியில் 10 பேரை ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்ததாக தெரிவித்துள்ளார். அதே அறையிலேயே சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை இருந்ததாகவும், இரவு நேரங்களில் தூங்க விடாமல் லத்தியால் தாக்கி, பூட்ஸ் கால்களால் மிதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆயுள் தண்டனை கைதிகளை வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு சிறையிலேயே உயிரிழந்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அந்த தாக்குதலின்போது தனது தாடை எலும்பு உடைந்ததாகவும், அதற்கான தழும்புகள் இன்றளவும் உடலில் இருப்பதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவை சர்ச்சைக்கு இரு தரப்பு விளக்கம்
அரசியல் களத்தில் தன்னை யார் கொச்சைப்படுத்த முயன்றாலும், நடந்த வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுவாழ்வில் தமிழர்களுக்காகப் போராடுபவர்கள் பல்வேறு அடக்குமுறைகளையும் கடந்து வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது தனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதே தவிர, யாரையும் உருவகேலி செய்யும் நோக்கம் இல்லை என்று விஜய்யும் விளக்கம் அளித்துள்ளார். தனிப்பட்ட முறையில் யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், இரு தரப்பினரின் விளக்கங்களும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? https://t.co/kzpwXi14L8
— M.K.Stalin (@mkstalin) September 10, 2026
இதையும் படிங்க: ஸ்டாலின் வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்! மொத்த ரகசியத்தை உடைத்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.... வைரல் வீடியோ!!!