ஸ்டாலின் வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்! மொத்த ரகசியத்தை உடைத்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.... வைரல் வீடியோ!!!



vijay-stalin-meeting-election-after-talk

தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். அப்போது தேர்தல் பிரசாரத்தில் தம்மை கடுமையாக விமர்சித்துப் பேசியதற்காக விஜய் வருத்தம் தெரிவித்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பான சுவாரஸ்யமான உரையாடல்களை அவர் வெளியிட்ட காணொளியில் பகிர்ந்துள்ளார்.

“ரொம்ப சாரி சார்” – விஜய்யிடம் ஸ்டாலின் கூறிய அறிவுரை

சந்திப்பின்போது விஜய், “ரொம்ப சாரி சார்” எனக் கூறியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கு, “அதையெல்லாம் விடுங்க ப்ரதர். இப்போது நீங்கள் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். யாரைப் பற்றிப் பேசினாலும் கண்ணியத்தோடு பேசுங்கள்” எனத் தான் அறிவுறுத்தியதாக கூறினார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் அந்த ஒரு உடல்மொழி! கடும் கண்டனம் தெரிவித்த திருமாவளவனின் எக்ஸ் பதிவு....!!!

முதலமைச்சருக்கான வார்த்தைகளும் உடல்மொழியும் எப்போதும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்றும், தலைவர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டியது அவசியம் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் பதவியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரீல்ஸ் கலாசாரத்தை விமர்சித்த ஸ்டாலின்

தற்போதைய ஆட்சி முறையையும் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். சட்டசபையை ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றுவது, அரசு கட்டிய பாலங்களின் மீது நின்று போட்டோஷூட் நடத்துவது போன்ற செயல்கள் ஆட்சி நிர்வாகத்தை சினிமா படப்பிடிப்பு போல நடத்தும் போக்கை காட்டுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

அதேபோல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாகவும் அவர் விமர்சனம் முன்வைத்தார்.

தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி

தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் தற்போது நடைமுறையில் இருப்பதற்கும் இடையே முரண்பாடு இருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார். விவசாயக் கடன் தள்ளுபடி, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், மகளிர் உரிமைத் தொகையாக ரூ.2,500 வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

ரீல்ஸ் மற்றும் விளம்பரங்கள் மூலம் ஒரு தலைமுறையையே ஏமாற்ற முடியாது என்றும், பொய்கள் வேகமாகப் பரவினாலும் இறுதியில் உண்மை மக்களுக்குத் தெரிந்துவிடும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மாற்றம் வேண்டும் என வாக்களித்த இளைஞர்களும் பொதுமக்களும் எது திறமையான அரசு, எது திறமையற்ற அரசு என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என அவர் தனது உரையை நிறைவு செய்தார். முதலமைச்சரின் கண்ணியம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அவரது கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

 

இதையும் படிங்க: எதிர்பார்த்தது அப்போ பழையது தானா..... 3 ரகசிய கோப்புகளை மேடையில் உடைத்த முதல்வர் விஜய்!!!