சற்று முன்... மூச்சுத்திணறலால் வெண்டிலேட்டர் உதவியுடன் VS பாபுவுக்கு சிகிச்சை! மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை....!!!



vs-babu-hospitalized-breathlessness

சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, லேசான மூச்சுத்திணறல் காரணமாக அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடல்நலக் குறைவு இருந்தபோதிலும், சமீபத்தில் நிறைவடைந்த தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் வி.எஸ்.பாபு பங்கேற்றிருந்தார். கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையும் படிங்க: இனி ஸ்டாலின் இல்ல... அவங்க அப்பா கருணாநிதியே நின்னாலும் முடியாது! வெறும் 5 நிமிஷம் தான்.... வெற்றி உறுதி ஆச்சு! கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அதிரடி பேச்சு.!!!

மூச்சுத்திணறலுக்கு சிறப்பு சிகிச்சை

வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் லேசான மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுடன், மூச்சுத்திணறலை சரிசெய்வதற்கான சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. VS பாபுவுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு

அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. பலதுறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் வானிலை மாற்றம், மழை எச்சரிக்கை நிலவி வரும் நிலையில், கொளத்தூர் எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதால், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: திடீர் மூச்சுத்திணறல்… ICU-வில் கொளத்தூர் எம்எல்ஏ! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!