# சற்று முன்: எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை...! தவெகவில் அவர் உறுப்பினராக கூட இல்லை! செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி.!!!
பொள்ளாச்சி வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் பார் நாகராஜுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் கே.ஏ.எஸ் விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படத்தைத் தொடர்ந்து எழுந்த அரசியல் சர்ச்சைக்கு அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
சமீபத்தில் பார் நாகராஜ், அமைச்சரைச் சந்தித்ததாகக் கூறப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, “மாற்றத்திற்கான அரசியல் இதுதானா?” எனக் கேள்வி எழுப்பி தி.மு.க மற்றும் அ.தி.மு.க தரப்பினர் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்....திருமாவளவன் திடீரென பின்வங்கினார்! முடிவை மாற்றியதால் அரசியலில் புதிய பரபரப்பு.!!!
வைரலான புகைப்படம் குறித்து விளக்கம்
இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறிய நிலையில், அதற்கு பதிலளித்த அமைச்சர், அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தினமும் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருவதாக கூறினார்.
அவ்வாறு சந்திக்கும் அனைவரின் பின்னணி குறித்தும் உடனடியாக அறிந்திருக்க முடியாது என்றும், ஒரு புகைப்படத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தொடர்பு இருப்பதாகக் கூறுவது தவறான புரிதலை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் உறுப்பினர் இல்லை
மேலும், சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த நபர் தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராகவோ, நிர்வாகியாகவோ அல்லது எந்தப் பொறுப்பிலும் இல்லை என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சமூக வலைதளங்களில் பரவி வந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையற்ற அரசியல் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: BREAKING: விசிக கட்சி 100% தேர்தல் களத்தில் போட்டியிடாது...! காலையிலேயே திருமாவளவன் பரபரப்பு அறிவிப்பு.!!!