தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி அமையும் வரை பா.ஜ.க போராடும்: அண்ணாமலை அதிரடி..!

தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி அமையும் வரை பா.ஜ.க போராடும்: அண்ணாமலை அதிரடி..!


BJP will fight till spiritual rule is established in Tamil Nadu

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள தேசுமுகிப்பேட்டை பகுதியில் வசிப்பவர் சிவதாமோதன். இவர் ஒரு சிவனடியார். இவரை திருவாசகம் முற்றோதல் புகழ் சிவனடியார் சிவதாமோதரன் என்று அன்பர்கள் அழைப்பர். இவரை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை நிமித்தமாக தேசுமுகிப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

பின்னர், சிவனடியார்கள் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை உரையாற்றினார், அப்போது அவர், எல்லோருக்கும் எல்லாமே கிடைக்க வேண்டும் என்பதை முன்னிட்டு நமது குருமார்கள், தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி வரவேண்டும் என்று கூறுகின்றனர். ஆன்மீக ஆட்சி என்பது கோவிலில் நித்தியப்பூஜை செய்வது கிடையாது. அது ஆன்மீக ஆட்சியின் ஒரு பகுதி அவ்வளவுதான்.

ஆன்மீக ஆட்சி என்பது மக்களுக்கான சித்தாந்த சிந்தனை. சமுதாயத்தில் உள்ள அனைவரையும் ஜாதி, மதங்களை கடந்து மனிதனை, மனிதனாக பார்ப்பது. அதைவிட மிக முக்கியமானது, பணம் படைத்தவர்கள் தன்னிடமிருப்பதை சுவிஸ் வங்கியிலோ அல்லது மற்ற வங்கி கணக்கிலோ பூட்டி வைப்பது அல்ல.

தனக்கு மிஞ்சியதை  இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே ஆன்மீக ஆட்சி. அத்தகைய ஆன்மீக ஆட்சியை தமிழகத்தில் அமைக்கவே பா.ஜ.க போரடிக் கொண்டிருக்கிறது. என்று அண்ணாமலை உரையாற்றினார்.