வேண்டாம் என தடுத்த நண்பர்கள்..! நீச்சல் குளத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்..! 50 லட்சம்பேர் பார்த்த வைரல் வீடியோ..!

வேண்டாம் என தடுத்த நண்பர்கள்..! நீச்சல் குளத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்..! 50 லட்சம்பேர் பார்த்த வைரல் வீடியோ..!


Women stunt in swimming pool gone viral

mermaid என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக நீச்சல் குளத்தில் ஸ்டணட் செய்வதன் மூலம் சமூகவலைத்தளங்களில் பிரபலமானவர்கள் ஏராளம். ஸ்டணட் செய்து வெற்றிபெற்றவர்களும் உள்ளனர், அதேநேரம் தோல்வியடைந்தவர்களும் உள்ளனர். ஆனால் இந்த வீடியோவில் வரும் பெண் ஒருவர் ஸ்டணட் செய்கிறேன் என்ற பெயரில் அனைவரையும் சிரிக்கவைத்துள்ளார்.

mermaid என்ற டிவிட்டர் பயனர் பகிர்ந்துள்ள அந்த 10 நொடி காட்சியில், பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் ஸ்டணட் செய்ய முயல்கிறார். அவரது நண்பர்கள் வேண்டாம், வேண்டாம் என தடுத்துள்ளனர். ஆனால் அந்த பெண் யார் பேச்சையும் கேட்காமல் நீச்சல் குளத்தில் ஸ்டணட் செய்கிறார்.

அப்போது அவரது தலையில் மாட்டியிருந்த டோப்பா முடி கொத்தாக கழண்டு கீழே விழுகிறது. இதனை பார்த்த அவரது நண்பர்கள் சிரிக்கின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இதுவரை 58 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதோ அந்த வீடியோ காட்சி.