குரைக்கிற நாய் கடிக்காது.. என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா.?! இவ்வளவு தானா விஷயம்.?! Why barking dogs do not bite proverb

பெரியோர்கள் பலரும் குரைக்கிற நாய் கடிக்காது என்று பல நேரங்களில் மேற்கோள் காட்டி பேசுவார்கள். உண்மையில் இதற்கு என்ன அர்த்தம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் தெரியாமலேயே அந்த வார்த்தையை நாம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இதற்கு அர்த்தம் என்னவென்று பார்ப்போம்.

Dog barking

குரைக்கிற நாய் கடிக்காது - நாய் குரைத்து கொண்டிருக்கும் போது அது கடிக்காது என்பதற்காக தான் இந்த பழமொழி கூறப்பட்டது என்று பலரும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். உண்மையில் அது அர்த்தம் இல்லை.

இது மனிதர்களின் குணத்தை ஒப்பிட்டு உருவாக்கப்பட்ட பழமொழியாகும். 

Dog barking

அதாவது நாய் குரைப்பது போல அதிகப்படியாக பந்தா காட்டுவது, வாய் பேசுவது, வாய் சவடால் விடுவது என்பது போன்ற குணங்களை கொண்டிருக்கும் ஆட்களை ஒப்பிட்டு தான் இந்த பழமொழி கூறப்படுகிறது.

இது போல குணாதிசயம் கொண்ட நபர்கள் செயலில் எதற்கும் லாயக்கு இல்லாதவர்கள். என்பதுதான் இதற்கு அர்த்தம். அப்படி தேவையில்லாமல் வார்த்தைகளை பிரயோகிக்கும் நபர்களை குறிப்பிடவே குரைக்கிற நாய் கடிக்காது என்று தெரிவிக்கின்றனர்.