நடிகர் அஜித்துடன் பிரபல இசையமைப்பாளர் திடீர் சந்திப்பு.! அட.. அவர்கள் பேசிய டாபிக்தான் வேறலெவல்!!
குளுகோஸும், 40 தூக்க மாத்திரைகளும்.. 27 வயது பெண் மருத்துவர் வினோத முறையில் தற்கொலை.!

மாப்பிளை பிடிக்கவில்லை என கூறியும் பெற்றோர் திருமணம் செய்ய முனைந்ததால் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த பெண்மணி மோனிகா (வயது 27). தற்போது மோனிகாவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த பெற்றோர் வரன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
பிடிக்காத வரனை பேசி முடித்த பெற்றோர் :
இதனிடையே சமீபத்தில் பார்த்த மாப்பிள்ளை ஒருவரை மோனிகாவிற்கு பிடிக்காத நிலையில், அவரது குடும்பத்தினர் அந்த வரன் குறித்து திருமணம் தொடர்பான பேச்சுகளை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு வரன் பிடிக்கவில்லை என தோழிகளிடம் கூறி வந்துள்ளார்.
இதையும் படிங்க: 4 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்த பெண்.. உடல் சிதறி பயங்கரம்.!
பெண்மணி தற்கொலை :
இந்நிலையில் சம்பவத்தன்று மருத்துவர் மோனிகா குளுக்கோஸ் ஊசியை கையில் செலுத்திக்கொண்டு மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரின் கைப்பையில் 40 தூக்க மாத்திரைகளும் இருந்தன. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் முதலீட்டில் பணம் இழந்ததால் அச்சம்.. குழந்தையை கொலை செய்து தாய் தற்கொலை.!