நடிகர் அஜித்துடன் பிரபல இசையமைப்பாளர் திடீர் சந்திப்பு.! அட.. அவர்கள் பேசிய டாபிக்தான் வேறலெவல்!!
4 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்த பெண்.. உடல் சிதறி பயங்கரம்.!

நான்கு வயது மகனுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஐயப்பன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 26). தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவருக்கும் தற்போது 4 வயதுடைய யாதேஸ்வரன் என்ற மகன் இருக்கிறார். கணவன் - மனைவி இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை :
இதனால் வீட்டை விட்டு வெளியேறிய விஜயலட்சுமியை உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். இதனிடையே சம்பவத்தன்று திருப்பூர் சென்றிருந்த விஜயலட்சுமி, தனது மகனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 1.30 மணியளவில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் முதலீட்டில் பணம் இழந்ததால் அச்சம்.. குழந்தையை கொலை செய்து தாய் தற்கொலை.!
காவல்துறையினர் விசாரணை :
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடல் சிதறிய நிலையில் கிடந்த தாய் மற்றும் மகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குடும்ப பிரச்சனையால் பெண்மணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது
இதையும் படிங்க: குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலர்.! மனஉளைச்சலில் எடுத்த பயங்கரமான முடிவு!!