நடிகை குளித்த தண்ணீர் தீர்த்தமா? ஆண்களுக்கான ஸ்பெஷல் சோப் தயாரித்து விற்பனை..!



Sydney Sweeney Soap News in Tamil

 

அமெரிக்கா நடிகை குளித்த நீரில் சோப் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நமக்கு பிடித்த நபர்களுக்காக நாம் எந்த விஷயத்தையும் செய்வோம். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வோம் என்ற வார்த்தைகள் காதல் திரைப்படங்களில் அதிகம் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் இவ்வாறான நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

இதையும் படிங்க: அடக்கடவுளே.. இரத்தக் காயங்களுடன் தமிழ் நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

நிறுவனம் அறிவிப்பு:

அப்படியான ஒரு வியப்பை ஏற்படுத்தும் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகையான சிட்னி ஸ்வினி குளித்த நீரில் ஆண்களுக்கான பிரத்தியேக சோப் தயாரிக்கப்பட உள்ளதாக டாக்டர் ஸ்க்வாட்ச் என்ற நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ரூ.800 க்கு விற்பனை:

இந்த சோப்பு விளம்பரத்தில் சிட்னி'ஸ் பாத்வாட்டர் பிளிஸ் என்ற பெயர் வைக்கப்பட்டு லிமிடெட் எடிஷன் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு சோப்புகளாக தயாரிக்கப்படும் இந்த சோப், இந்திய மதிப்பில் ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

சரோஜாதேவி சோப்பு டப்பா:

நடிகர் சூர்யா பிளாஸ்டிக் சோப்பு டப்பா ஒன்றை நடிகை சரோஜாதேவி பயன்படுத்தியதாக விற்பனை செய்ய முயலும் ஒரு பட காட்சி முன்பு பிரபலமாக இருந்தது. அந்த ஞாபகம் தான் இதனை காணும் போது பலருக்கும் வருவதாக கூறுகின்றனர்.

 
 

 

 

இதையும் படிங்க: அட இவரா?.. 4 மாதத்தில் திருமணமாம்.. விஷாலை திருமணம் செய்யும் பிரபல நடிகை?.. குஷியில் ரசிகர்கள்.!!