90ஸ் கனவுகன்னி நடிகை நக்மாவா இது.! 50 வயதில் எப்படியிருக்கார் பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!



Actress nagma latest photo viral

90ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நக்மா. இவர் பிரபல நடிகை ஜோதிகாவின் சகோதரி. நடிகை நக்மா இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த காதலன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார்.

90ஸ் கனவு கன்னி

தொடர்ந்து அவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பாட்ஷா திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார். பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த லவ் பேர்ட்ஸ், ஜானகிராமன், வில்லாதி வில்லன், காதலன், மேட்டுக்குடி, பிஸ்தா, சிட்டிசன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை நக்மா தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர்.

இதையும் படிங்க: வடசென்னை 2 எப்போ?? நடிகர் தனுஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்.! உற்சாகத்தில் ரசிகர்கள் ஆரவாரம்!!

நடிகை நக்மா லேட்டஸ்ட் புகைப்படம்

 பின்னர் அவர் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வந்தார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா மும்பையில் தனது உயர்கல்வியை முடித்துள்ள நிலையில் அண்மையில் அவருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் நடிகை ஜோதிகாவின் சகோதரியான நடிகை நக்மாவும் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Nagma

 

இதையும் படிங்க: திடீர் மாரடைப்பு.. பிரபல இயக்குனர் மரணம்.! சோகத்தில் கலங்கும் திரையுலகம்!!