வடசென்னை 2 எப்போ?? நடிகர் தனுஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்.! உற்சாகத்தில் ரசிகர்கள் ஆரவாரம்!!



Actor Dhanush give update about Vada Chennai 2 movie

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என பன்முக திறமை கொண்டு கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு பிரபலமாக இருப்பவர் நடிகர் தனுஷ். அவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த ராயன் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. தொடர்ந்து தனுஷ் 'குபேரா' என்ற படத்தில் நடித்துள்ளார்.

 குபேரா இசை வெளியீட்டு விழா 

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, சயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சோஷியல் த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் மற்றும் எல்எல்பி அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இதையும் படிங்க: ஓடிடியில் ரிலீஸாகும் சூர்யாவின் ரெட்ரோ.! எப்போ தெரியுமா?? வெளிவந்த தகவல்!!

Dhanush

 வடசென்னை 2 அப்டேட்

குபேரா திரைப்படம் வரும் 20ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 1 )இரவு தனியார் கல்லூரியில் நடைபெற்றுள்ளது அப்பொழுது பேசிய நடிகர் தனுஷிடம் ரசிகர்கள் வடசென்னை 2 அப்டேட் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இந்நிலையில் தனுஷ், 'நீங்களும் 2018ல் இருந்து கேட்டுகிட்டே இருக்கீங்க. அடுத்த வருஷம் துவங்கிடலாம்' என கூறியுள்ளார். இதனை கேட்டதும் ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தி ஆரவாரம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தனுஷ்க்கு ஜோடி இந்த நடிகையாமே!! அப்போ கூட்டம் பிச்சுக்கும்!!