தெற்கு பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டம்! ஈரான் சலாலா துறைமுகத்தில் ட்ரோன் தாக்குதல்! சேமிப்பு எரிபொருள் தொட்டிகள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு....! அதிர்ச்சி காட்சி!!!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் சம்பவமாக ஓமானில் உள்ள முக்கிய கடல்சார் மையமான Salalah Port மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் உலகளாவிய எரிசக்தி விநியோக அமைப்புகளுக்கும் கடல்சார் வர்த்தகத்துக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.
சலாலா துறைமுகத்தில் ட்ரோன் தாக்குதல்
அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஓமானின் முக்கிய உத்திசார் மையமான சலாலா துறைமுகத்தின் மீது கடந்த புதன்கிழமை Drone Attack நடத்தப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மூலம் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: குவைத் வானில் அமெரிக்க போர் விமானங்கள் வெடித்து சிதறல்! வைரலான அதிர்ச்சி வீடியோ..!!
எரிபொருள் சேமிப்பு தொட்டிகளில் தீ
இந்த தாக்குதலின் போது துறைமுகத்தில் இருந்த எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை நோக்கி ட்ரோன்கள் மோதியதாக கூறப்படுகிறது. அதன் விளைவாக அங்கு பெரிய வெடிப்பு ஏற்பட்டதுடன், தெற்கு பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் பரவியது.
ஓமான் பாதுகாப்புப் படையினர் பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சில ட்ரோன்கள் இலக்கை அடைந்ததால் துறைமுகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சர்வதேச வர்த்தகத்தில் பாதிப்பு
இந்த சம்பவத்திற்குப் பிறகு சலாலா துறைமுகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச எரிபொருள் விநியோகம் மற்றும் கடல்சார் போக்குவரத்து துறையில் சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றத்தின் பின்னணியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதன் விளைவாக உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் கடல்சார் வர்த்தக நிலைமைகள் மீது கூடுதல் தாக்கம் ஏற்படக்கூடும் என சர்வதேச வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.
#BREAKING: Visuals from Port of Salalah in Oman after a droone hit the fuel tanks.#Irán pic.twitter.com/16LLuOxw5G
— The North Front (@thenorth_front) March 11, 2026
இதையும் படிங்க: வெளிச்சத்துக்கு வந்த உண்மை....175 அப்பாவி பள்ளி குழந்தைகள் பலியான கொடூரத்தில் அமெரிக்கா சொன்ன பொய்....சிக்கிய ஏவுகணை ஆதார வீடியோ காட்சி!!!