டீயுடன் கப் கேக் சாப்பிட்ட பெண் மரணம்.. மூச்சுத்திணறி அதிர்ச்சி சம்பவம்.!



In Kerala Women Died After Eating Cupcake with Tea That Struks On Throat

டீ குடிக்கும்போது கப் கேக் சாப்பிட்ட பெண் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முன்னதாக கேரள மாநிலத்தில் மந்தி பிரியாணி, பரோட்டா சாப்பிட்டு பலர் உயிரிழந்ததாக அடுத்தடுத்த செய்திகள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில் நேற்று கப் கேக் சாப்பிட்ட பெண் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டீ குடிக்க சென்ற பெண்ணுக்கு மூச்சுத்திணறல் :

கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டம் மலப்புரம், தனலூர் பகுதியில் வசித்து வந்தவர் சைனாபா. இவர் உள்ளூர் கடையில் டீ குடிக்க சென்ற நிலையில், டீயுடன் சேர்த்து கப்கேக் ஒன்றை வாங்கி சாப்பிட்டதாக தெரியவருகிறது. அப்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். 

இதையும் படிங்க: மக்களே கவனம்.. மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. அடுத்தடுத்து இருவர் பலி?.!

death

நொடியில் பறிபோன உயிர் :

இதனால் அவரை குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், கப் கேக்கின் துண்டு சுவாசப்பகுதியில் சிக்கியிருப்பது தெரிய வந்தது. மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும் மயக்க நிலையில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சோகத்தில் குடும்பத்தினர் :

சைனாபாவின் மகளுக்கு வரும் ஜூன் 7 ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்து குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: Video: உறங்கி கொண்டிருந்த சிறுவனுக்கு கருநாக வடிவில் வந்த எமன்.. வாயில் நுரை தள்ளி பரிதாப சாவு.!!