இரத்தசோகை வராமல் தடுக்கும் வெஜ் போஹா.. வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது  எப்படி?.! அசத்தல் ரெசிபி..!!

இரத்தசோகை வராமல் தடுக்கும் வெஜ் போஹா.. வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது  எப்படி?.! அசத்தல் ரெசிபி..!!



veg poha recipe for health

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும் வெஜ் போஹா எப்படி செய்வது என்பதுதான் இந்த செய்தித்தொகுப்பு.

தேவையான பொருட்கள் :

கடுகு - 1/4 தேக்கரண்டி 
சீரகம் - 1/4 தேக்கரண்டி 
சர்க்கரை - 1 சிட்டிகை 
வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு 
முந்திரி - சிறிதளவு 
கொத்தமல்லி - சிறிதளவு 
கருவேப்பிலை - சிறிதளவு 
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கு ஏற்ப 
எண்ணெய் - தேவைக்கேற்ப 
கேரட் - 1 
பட்டாணி - சிறிதளவு 
உருளைக்கிழங்கு -1
பீன்ஸ் - சிறிதளவு 
கெட்டி அவல் - 1 கப்

செய்முறை :

★முதலில் காய்கறி மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

★பின் அவலுடன் தண்ணீர் சேர்த்து கழுவி ஐந்து நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.

★ஒரு வாணலியை எண்ணெய் விட்டு சூடாகியதும் கடுகு, சீரகம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

★அதனுடன் காய்கறிகள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்க வேண்டும்.

★பின் சர்க்கரை, உப்பு, அவல் சேர்த்து கிளறி சிறிது நேரம் வேக விட வேண்டும்.

★இவை அனைத்தும் நன்றாக வந்தபின் எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி, மேலே முந்திரி, வேர்க்கடலை சேர்த்து பரிமாறினால் வெஜ் போஹா தயாராகிவிடும்.