கண்களை பாதுகாக்க வேண்டுமா? கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

கண்களை பாதுகாக்க வேண்டுமா? கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!



Tips of safety to eyes

நமது உடல் உறுப்புகளில் மிகவும் மிக முக்கியமானது கண்கள். எனவே இதனை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கு தினமும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். அதன்படி கண்களை பாதுகாக்க தினமும் கண்களை மூடி, மெதுவாக விரல் முனிகளால் கண் இமைகளை அழுத்தி விட வேண்டும். இதனை தினமும் 10 முறை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் கண் இமைகளில் உள்ள சுரப்பிகளை தூண்டி, கண்ணீர் சுரப்பை அதிகரிக்கும். அதேபோல் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை, 20 நொடிகள் கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். இது கண்களின் தசைகளை தளர்த்தி கண் அழுத்தத்தை குறைக்கும்.

eyes

குறிப்பாக வெயில் காலத்தில் வெளியில் செல்லும்போது சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்க சன் கிளாஸ் அணிய வேண்டும். அதேபோல் காற்று அதிகமாக வீசும் போது கண்களை பாதுகாக்க கண்ணாடி அணிய வேண்டும். அதேபோல் மாலை நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கண்ணாடி அணிய வேண்டும். 

குறிப்பாக கண்களை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கையில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கும் என்பதால் கண் தொடர்பான பல்வேறு தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கையை நன்றாக கழுவி விட்டு கண்களை தொட்டு சுத்தம் செய்யலாம்.

மேலும் கண் ஆரோக்கியத்திற்கு உதவும் பழங்கள், காய்கறிகள், மீன், முட்டை போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதேபோல் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் கண் ரத்த அழுத்தத்தை குறைத்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

eyes

குறிப்பாக அதிக நேரம் டிவி பார்ப்பது, லேப்டாப் மற்றும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் ஆண்டிற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொண்டால் கண் தொடர்பான நோய்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.