லைப் ஸ்டைல் காதல் – உறவுகள் 18 Plus

ஆடி மாதம் வந்தா ஏன் புதுமண தம்பதிகளை பிரித்து வைக்கிறங்கா தெரியுமா?

Summary:

this is the reason behind separation of newly married couples

ஆடி மாதம் வந்தாலே அம்மன் கோவிலுக்கு கூழ் ஊற்றுவதும், புதிதாக திருமனான தம்பதிகளை பிரித்து வைப்பதும் வழக்கம்தான். இந்த ஆடி மதம் வந்தா மட்டும் புதுசா திருமணமான ஜோடிகளை ஏன் பிரிச்சு வைக்கிறாங்கனு நீங்க யோசிச்சது உண்டா?

ஆம்..எதற்காக புதுமண தம்பதிகளை பிரித்து வைக்கின்றார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க...

புதிதாக திருமணமான தம்பதிகள்  ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், சித்திரை மாதத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் உடல் நலம் பாதிக்கும் என்பது தான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் சித்திரையில் குழந்தை பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது என்று  கூறப்படுகிறது.சரி அப்படி என்றால், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் போது வரும் ஆடி மாதத்திற்கு கூட பெண் வீட்டிற்கு மனைவியை அனுப்பி வைக்க வேண்டுமே என சந்தேகம் வர தான் செய்யும்.....

இதற்கு இன்னொரு விளக்கம் பார்க்கலாம் வாங்க...

ஆடி மாதத்தில்தான் அம்பிகை தவமிருந்து இறைவனோடு இணைந்தாள் என்கிறது புராணம்.

கணவன்  மனைவிக்குள் எந்த பிரச்சனை இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் நாடி செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது ஆடி மாத சிறப்பு

கணவனை மனைவி தெய்வமாக நினைக்க வேண்டும் என்றும், கணவனும் தன் மனைவியை நாடி செல்ல வேண்டும் என்கிறது புராணம்.

மேலும், திருமணமான பெண்ணை சீர் வரிசை வைத்து தன் வீட்டிற்கு அழைத்து வந்து, தாயானவள் அந்த பெண்ணிற்கு பூஜையும், விரத முறைகளை பற்றியும் ஒரு தாயானவள் சொல்லி தர வேண்டும்..அதற்கான உகந்த  மாதம் ஆடி மாதம் என்கிறது புராணம்

இது போன்ற பல கருத்துக்களை வெளிப்படுத்தும் இந்த ஆடி மாதம் எந்த அளவிற்கு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்த பதிவு.  


Advertisement