ஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை! இந்த உணவுகளும் ஒரு காரணம்!Reasons for bad smell in body in tamil

ஒருசிலர் சுத்தமாக குளித்துவிட்டு வந்தாலும் அவர்கள் மீது சிறு சிறு நாற்றம் வீசும். அதற்கு அவர்கள் மீது இருக்கும் வியர்வை ஒருகாரணமாக இருந்தாலும் அவர்கள் உண்ணும் உணவும் ஒருகாரணமாக அமைகிறது.

நாம் சாப்பிடும் இறைச்சியானது ஜீரணம் ஆக அதிக நேரம் தேவை படுகிறது. இந்த இறைச்சியானது நமது உடலில் ஒருசில பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. அவர் வியர்வையுடன் கலந்து ஒருசில துர்நாற்றத்ததை ஏற்படடுத்தக்கூடும்.

Health tips in tamil

பூண்டு பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து வியர்க்கும் போது மோசமான துர்நாற்றத்தை வெளியிடும். தொடர்ச்சியா மீன் சாப்பிடுபவர்கள் மீது ஒருவிதமான வாடை அடிக்க கூடும். அதற்கு காரணம் மீனில் இருக்கும் டிரிமெதிலமைன் என்ற பொருள்தான்.

சல்பர் அதிகம் உள்ள முட்டைகோஸ், காலிப்ளவர், ப்ரோக்கோலி போன்ற உணவுகளை உண்ணும்போது ஒருவிதமான வாடை வரக்கூடும். காபி குடித்தவுடன் வாய் மிகவும் உலர்ந்து விடுகிறது. இதனால் உங்கள் வாயில் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதனால் பேசும்போதும் வியர்வை வரும்போதும் துர்நாற்றம் ஏற்படும்.

Health tips in tamil

அல்கஹால் அருந்தும்போது அசிட்டிக் அமிலம் உருவாகிறது. இது வியர்வை மற்றும் பேசும்போது துர்நாற்றத்தை உருவாக்கும்.