லைப் ஸ்டைல்

தினமும் காதை பட்ஸால் சுத்தம் செய்பவரா நீங்கள்.! பெரும் ஆபத்து.! மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Summary:

problems of using buds inside ear daily

பொதுவாக சிலர் தங்களது காதில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற அடிக்கடி பட்ஸ் பயன்படுத்துவது வழக்கம். மேலும் பலர் தினமும் பட்ஸ் மூலம் காதுகளை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பர். இந்த பழக்கத்தால் நாம் அதற்கு அடிமையாகுவது மட்டுமின்றி பெரும்  பாதிப்பையும் ஏற்படுத்தும். காதுகளில் புண் ஏற்படலாம், அல்லது காது கேட்காமல் போகும் நிலைக்கும் செல்லலாம்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த ஜாஸ்மின் என்ற 37 வயது பெண் நாள்தோறும் தனது காதை சுத்தப்படுத்துவத்தை வழக்கமாக வைத்திருந்துள்ளார். மேலும் அதற்காக  பட்ஸை பயன்படுத்திவந்துள்ளார். நாளடைவில் இந்த பழக்கத்திற்கு பெருமளவில் அடிமையாகியுள்ளார்.  

         à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà¯à®Ÿà¯ˆà®¯ படம்

இந்நிலையில் இவருக்கு திடீரென காது கேட்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டபோது காதில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இதற்காக மருந்துகள் கொடுத்தும் ஆண்ட பிரச்சினை சரியாகவில்லை. 

அதனை தொடர்ந்து ஜாஸ்மின் காதிற்கு பார்க்கும் ஸ்பெஷல் மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்பொழுது அவர்கள் காதில் அடிக்கடி பட்ஸை பயன்படுத்தியதால் காதுக்குள் நோய்த்தொற்று ஏற்பட்டு ஆடு பரவியதால் மண்டை ஓடு அரிக்கத்தொடங்கி விட்டது. எனவே அதனை  உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு காது கேட்கவில்லை. அதனை தொடர்ந்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 


Advertisement