லைப் ஸ்டைல்

சர்க்கரை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? அப்படி என்றால் உங்களுக்கு பாலியல் குறைபாடு வரப்போகுது உஷார்!

Summary:

Paliyal kuraipadu

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டால் போதாது. அதற்கு ஏற்ப உணவு முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் உடற்பயிற்சிகள் இன்றியும் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. இதிலிருந்தே நம் உடல் எடை என்பது, உணவை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. 

ஒரு சிலர் டயட்டை பின்பற்றுகின்றனர். இந்த டயட்டால் பல நன்மைகள் கிடைத்தாலும் சில தீமைகள் நம்மை தொற்றிக் கொள்கின்றன.அதில் டயட் மேற்கொள்ளும் போது நாம் அதிகம் பால், பழம், ஓட்ஸ், ஜூஸ் போன்றவற்றை தான் அதிகம் உட்கொள்கின்றோம். இவை அனைத்திலும் நாம் அதிகப்படியான சர்க்கரையை சேர்த்து கொள்கிறோம். இதனால் முதலில் பாதிக்கப்படுவது என்ன தெரியுமா. 

உடல் கோளாறு அல்லது மனக்கோளாறு காரணமாக நீங்கள் உறவில் ஆர்வம் காட்டாமல் இருப்பது சாதாரணமானதுதான். ஆனால் அதுவவே தொடர்ச்சியாக இருந்தால் உங்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சினை ஏற்படப் போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள். இதற்கு முக்கியக் காரணம் இனிப்பு ஆகும். உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளும் அதிகப்படியான சர்க்கரை பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கிறது. 

டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற முதன்மை ஹார்மோன்களின் உற்பத்தியையும் குறைக்கிறது. எனவே உங்கள் உணவில் அதிக சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.


Advertisement