இரவில் குளிப்பதனால் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இது தெரிஞ்சா இனி டெய்லி குளிப்பிங்க!



Night time bath benefits in tamil

பொதுவாக தினமும் குளிப்பது நமது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. காலையில் குளிப்பதனால் நமது உடல் ப்ரெஷாகவும், எனர்ஜியாகவும் இருக்க உதவுகிறது. மேலும், தலையுடன் குளிப்பதனால் உடலில் உள்ள சூட்டை குறைத்து உடல் குளிர்ச்சி அடையவும் குளியல் பயன்படுகிறது.

அதேபோல் காலை நேர குளியலைவிட இரவு நேரம் குளிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம் வாங்க.

1 . நல்ல தூக்கம்
தூங்குவதற்கு முன் இரவில் குளிப்பதனால் உடல் புத்துணர்ச்சி பெற்று நன்கு தூங்குவதற்கு உதவுகிறது. மேலும், உளவியல் ரீதியாகவும் இரவில் குளிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

health tips

2 . முகப்பரு
நாம் காலைமுழுவதும் சுற்றிவிட்டு அப்படியே இரவில் தூங்கும்போது முகத்தில் உள்ள எண்ணெய் பசையோடு, அந்த அழுக்குகள் சேர்ந்து முகப்பரு வரலாம். இரவு ஜிங்க் சோப்பை போட்டு உடலை சுத்தம் செய்வதும், குளிப்பதும் முகப்பரு வராமல் நம்மைப் பாதுகாக்கும்.

3 . அலர்ஜி
சிலருக்கு பருவநிலை மாறும்போது அலர்ஜி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாள் முழுவதும் அலைந்துவிட்டு வீட்டிற்கு வரும்போது கிருமிகள் நமது உடலில் சேர்ந்து நோய் தோற்று வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரவில் குளிப்பதனால் இதுபோன்ற அலர்ஜிகளில் இருந்து தப்பிக்க உதவும்.

health tips

4 . முடி வளர்ச்சி
அதேபோல் இரவில் குளிக்கையில் நம் முடிக்கும் அது ரொம்ப நல்லது. ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள பேருதவி செய்கிறது. இது முடிவள்ர்ச்சியையும் அதிகரிக்கும்.