உலகம் லைப் ஸ்டைல்

ஒரே வலி..! தினமும் வீங்கும் வயிறு..! பெண்ணின் வயிறு மட்டும் 19 கிலோ..! காரணம் புரியாமல் திணறும் மருத்துவர்கள்.! வைரல் புகைப்படம்.!

Summary:

Mysterious condition makes womans stomach like balloon

சீனாவை சேர்ந்த பெண் ஒருவரின் வயிறு மட்டும் வீங்கிக்கொண்டே செல்லும் சம்பவம் ஆச்சரியத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்தவர் ஹுவாங் குவாக்சியன். இவருக்கு திருமணம் முடிந்த இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில் இவருக்கு திடீரெனெ வயிறு வீங்கி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்களை சந்தித்த அந்த பெண் மருத்துவர்களின் பரிந்துரையின்படி மருந்துகளை சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு அவரது வயிறுவலி குறைந்துள்ளது.

ஆனால் அவரது வயிறு வீங்குவது நிற்கவில்லை. இதனால் மீண்டும் மருத்துவர்களை சந்தித்துள்ளார் அந்த பெண். அவரின் வயிறை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல் நோய், கருப்பை புற்றுநோய், உடலில் கட்டி உருவாகுதல், அடிவயிறு மற்றும் மார்பு ஆகியவற்றில் தேவையற்ற திரவம் உருவாகுதல் உள்ளிட்டவை இருப்பதைக் கண்டறிந்தனர்.

ஆனால் அவரது வயிறு மட்டும் ஏன் வீங்குகிறது என்பதற்கான காரணத்தை அவர்களால் கண்டறியமுடியவில்லை. தற்போது 54 கிலோ எடையுடன் உள்ளார் அந்த பெண். இதில் அவரது வயிறு மட்டும் 19 கிலோ உள்ளது.

சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது சிகிச்சைக்காக பண உதவி கேட்ட அந்த பெண்,  "தன்னால் நடக்க முடியவில்லை, சரியாக தூங்க முடியவில்லை, எனது குழந்தைகளைக்கூட கவனித்துக்கொள்ளமுடியவில்லை, சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கே மிகவும் சிரமப்படுவதாகவும், நான் சீக்கிரம் இந்த நோயிலிருந்து வெளிவந்து விடுவேன் என்று நம்புகிறேன்" எனவும் கூறியுள்ளார்.


Advertisement