தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கொசுவர்த்திகளால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து; பகீர் எச்சரிக்கை.!
வீடுகளில் நாம் உறங்கும்போது, கொசுத்தொல்லை என்பது இயல்பாகவே இருக்கும். மழைக்காலங்களில் சற்று கூடுதலாகவே கொசுத்தொல்லையை நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இதனால் 5 மணிக்கு மேல் வீட்டின் கதவை சுற்றிவிட்டு, வீட்டுக்குள் இருக்கும் சூடான சூழலுடன் பலரும் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஒருசிலர் எதையும் பொருட்படுத்தாமல் வீட்டிக்கு வெளியே கொசுக்கடியுடன் அமர்ந்து இருப்பார்கள். இவர்கள் கொசுக்களை விரட்டியடிக்க கொசுவர்த்திகளை பயன்படுத்துவது வழக்கம். இன்றளவில் அவை பல விதங்களில் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க: பித்தவெடிப்பு பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
கொசுவர்த்தி ஏற்றிய சில நிமிடங்களில், கொசுவர்த்தியின் புகை கொசுக்களை விரட்டியடிக்கும். இதனிடையே, ஹெல்த்ஷாட் நடத்திய ஆய்வில், கொசுவர்த்தி சுருள்கள் உடல்நலனுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான ரசாயனங்களும் கொசுவர்த்தியில் நிறைந்து கிடக்கின்றன.
பூட்டிய அறையில் தொடர்ந்து கொசுவர்த்தியை உபயோகம் செய்வது நுரையீரல் சார்ந்த பிரச்சனையை உண்டாக்கும். அதேபோல, கல்லீரல் பிரச்சனை, தோல் ஒவ்வாமை பிரச்சனை போன்றவைகளும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உங்களின் வீட்டில் கொசுத்தொல்லையா இருக்குதா? இதை ட்ரை பண்ணி பாருங்க.!