அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் கூட பிரச்சினை ஏற்படுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!more-drinking-water-for-health-problems

பொதுவாக மனிதர்கள் ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் குறைவாக தண்ணீர் குடித்தால் உடலுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேபோல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தாலும் சில பிரச்சனைகள் ஏற்படும் என கூறப்படுகிறது.

drinking water

அதன்படி அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உடலுக்கு என்ன தீமைகள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் ஹைபோநெட்ரீமியா என்ற பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் எனவும், இதனால் சிறுநீர் தொற்று உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் சோடியம் அளவு குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

drinking water

அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால் எலக்ட்ரோலைட் அளவு குறைய வாய்ப்புள்ளது. எனவே நமது உடலுக்கு தேவையான அளவை சரியாக குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்