தமிழகம் லைப் ஸ்டைல்

சென்னையில் பள்ளி ஆசிரியை மாணவனுக்கு விடாது பாலியல் தொல்லை; எச்சரித்தும் அடங்காத ஆசிரியை!

Summary:

lady teacher tortured school boy

நாளுக்கு நாள் பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களுடன் நடக்கும் பாலியல் தொல்லைகளைத் தாண்டி தன்னிடம் பயிலும் மாணவ, மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அவல நிலை அதிகரிக்க துவங்கியுள்ளது.

இதைப் போன்றுதான் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவர் ஒருவருக்கு அதே பள்ளியில் பணிபுரியும் கணினி ஆசிரியை பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

சென்னை முகப்பேரில் உள்ள அந்த தனியார் பள்ளியில் சென்னையை அடுத்த மாங்காட்டில் இருந்து 17 வயது மாணவர் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய 40 வயது ஸ்மிதா என்ற ஆசிரியை மாணவனிடம் பள்ளியில் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவர் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை ஸ்மிதா பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

வேலை பறிபோகியும் அடங்காத கணினி ஆசிரியையை ஸ்மிதா மாணவனை அலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் மாணவனிடம் ஆபாசமாக பேசியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து மாணவனின் பெற்றோர் நொளம்பூர் காவல் நிலையத்தில் ஆசிரியை ஸ்மிதாவின் மீது புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement