பாத்திரம் கழுவும்போது இந்த தவறுகளை செய்கிறீர்களா?.. மறைந்திருக்கும் ஆபத்து.!
நமது வீட்டில் தினமும் ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் சமையலறை இருக்கிறது. அதுகுறித்து விரிவாக இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆரோக்கியம்:
நமது குடும்பத்தின் ஆரோக்கியம் முழுமையாக சமையலறை சுத்தம் மற்றும் பாத்திர பராமரிப்பிற்கு தொடர்புடையது ஆகும். உணவு தயாரிக்கும் பாத்திரங்கள், சமையல் மேசைகள் நமது உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனாலேயே பெரியவர்கள் எப்போதும் சமையலறையை சுத்தமாக வைக்க மற்றும் பாத்திரங்களை முறையாக கழுவ வேண்டும் என அடிக்கடி அறிவுறுத்தி வந்துள்ளனர்.
இதையும் படிங்க: "நீரின்றி அமையாது உலகு." எப்போது? எப்படி..? எவ்வளவு? குடிக்க வேண்டும்.!
தவறுகள்:
பாத்திரங்களை கழுவும்போது நமக்கு தெரியாமல் சில தவறுகள் நடக்கின்றன. அவற்றுள் ஒன்று அதிகமாக சோப்பை பயன்படுத்துவதாகும். பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்ய அதிக சோப்பை பயன்படுத்தினால், பாத்திரங்களில் ரசாயன அடுக்குகள் உருவாகி உணவில் ஒட்டிக் கொண்டு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பிளாஸ்டிக் மற்றும் நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சூடான நீரைப் பயன்படுத்துவது கூட ஆபத்தானது. இது பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாத்திரங்களின் உள்கூறுகளை சேதப்படுத்தும்.

நான்-ஸ்டிக் பாத்திரத்தில் கவனம்:
பாத்திரங்களை கழுவும் ஸ்பாஞ்ச்கள் மற்றும் ஸ்க்ரப்பர்களையும் முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பது கூட பெரிய தவறு. இதனால் பாக்டீரியாக்கள் வளர்ந்து பாத்திரங்களை அழுக்காக்கும். நான்-ஸ்டிக் பாத்திரங்களில் மென்மையான பஞ்சை பயன்படுத்த வேண்டும். ஸ்டீல் ஸ்க்ரப்பர் பயன்படுத்தினால் பாத்திரத்தின் பூச்சுகள் சேதமடையும். ஸ்பாஞ்ச்களை ஒவ்வொரு வாரமும் மாற்றி, ஸ்க்ரப்பர்களை சூடான நீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதிக நேரம் பாத்திரங்களை சிங்கில் வைக்க கூடாது. இதனால் பாத்திரங்களில் பாக்டீரியாக்கள் வளர்ந்து துர்நாற்றம் ஏற்படும். இதனால் ஆரோக்கிய பாதிப்பு உருவாக்கும்.