சளி, இருமல், வாயுத்தொல்லையை போக்கும் சுக்கு மல்லி காபி.. வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்வது எப்படி?..!!

சளி, இருமல், வாயுத்தொல்லையை போக்கும் சுக்கு மல்லி காபி.. வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்வது எப்படி?..!!


how-to-prepare-sukku-malli-coffee

சளி மற்றும் இருமலை போக்கும் சுக்கு மல்லி காபி எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

சுக்கு மல்லி காப்பியை குடிப்பதன் மூலம் சளி, இருமல் போன்றவை குணமடைகிறது. மேலும் பசியை தூண்டி இரப்பை வாயுதொல்லையையும் போக்குகிறது.

தேவையான பொருட்கள் :

கருப்பட்டி - தேவைக்கேற்ப 
மிளகு - 1 தேக்கரண்டி 
சுக்கு - 1 துண்டு 
சீரகம் - 1 தேக்கரண்டி 
காபி தூள் - 1 தேக்கரண்டி 
மல்லி விதை - 2 தேக்கரண்டி 
ஓமம் - 1 தேக்கரண்டி 
துளசி - 1 கைப்பிடி

Sukku Malli Coffee

செய்முறை :

★முதலில் மல்லிவிதை, மிளகு, சீரகம், ஓமம், சுக்கு ஆகியவற்றை வெறும் கடாயில் இளம்சிவப்பாக வறுத்து பொடி செய்துகொள்ள வேண்டும்.

★அடுத்து தண்ணீரை கொதிக்கவைத்து நன்றாக கொதி வந்ததும், 1 தேக்கரண்டி வறுத்து வைத்த பொடியையும், கருப்பட்டியும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

★பின் துளசி சேர்த்து இறக்கி வடிகட்டி பருகலாம் அல்லது பால் சேர்த்தும் பருகலாம்.

★வாரத்திற்கு மூன்று நாட்கள் சுக்கு மல்லி காபி குடிப்பதன் மூலம் ஜீரண பிரச்சனை சரியாகும். சளி, இருமல் போன்றவையும் குணமாகும்.