உடலுக்கு பல நன்மையளிக்கும் முட்டைகோஸ் பச்சை மிளகாய் சட்னி.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!



how-to-prepare-muttaikos-chutney

முட்டைகோஸ் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, உடல்எடையை குறைக்க உதவும். புற்றுநோய் வளர்வதையும் தடுக்கும். இப்படி உடலுக்கு நன்மையளிக்கும் முட்டைகோஸில் பச்சை மிளகாய் சட்னி செய்வது குறித்து காணலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய் - இரண்டு முட்டைகோஸ் - 150 கிராம் 
புளி - எலுமிச்சை பழ அளவு 
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி இஞ்சி - சிறிதளவு 
எண்ணெய் - தேவைக்கேற்ப 
உப்பு - தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு :

காய்ந்த மிளகாய் - இரண்டு
கடுகு - கால் டீஸ்பூன் 
எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட பச்சை மிளகாய், முட்டைகோசை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

★கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு, பச்சைமிளகாய், கோஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்க வேண்டும். 

★இதன் பின்னர் வறுத்த உளுந்தம்பருப்பு, கோஸ், பச்சைமிளகாய், புளி, இஞ்சி, உப்பு போன்றவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

★அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கினால் சுவையான முட்டைக்கோஸ் பச்சை மிளகாய் சட்னி தயார்.