நடிகை சாய் தன்ஷிகாவுடன் விஷால் திருமணம்.! அட.. இருவருக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷாலும், பிரபல நடிகை சாய் தன்ஷிகாவும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நேற்று சென்னையில் யோகி டா படத்தின் டிரைலர், ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நடிகை சாய் தன்ஷிகா, விஷால் திருமணம்
மேலும் மேடையில் பேசிய நடிகை சாய் தன்ஷிகா, தானும், விஷாலும் 15 ஆண்டு நண்பர்களாக பழகி வந்த நிலையில் தற்போது காதலிப்பதாகவும், இருவரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி விஷாலின் பிறந்தநாளன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அறிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய விஷாலும் அதனை உறுதி செய்தார்.
இதையும் படிங்க: நடிகர் விஷாலுடன் டும் டும் டும்.! திருமண தேதியுடன் ரசிகர்களுக்கு ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகை.!
வயது வித்தியாசம்
இந்த அறிவிப்பு வெளியான நிலையில், அவர்கள் இருவருக்குமிடையே வயது வித்தியாசம் குறித்து ரசிகர்கள் ஆராய துவங்கினர். நடிகர் விஷாலுக்கு ஆகஸ்ட் 29 பிறந்தநாள். 48 வயது நிறைவடைகிறது. மேலும் நடிகை சாய் தன்ஷிகாவிற்கு 35 வயது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே 13 வயது வித்தியாசம் உள்ளது.
இதையும் படிங்க: நடிகர் விஷாலுடன் டும் டும் டும்.! திருமண தேதியுடன் ரசிகர்களுக்கு ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகை.!