சன் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றம்! எந்தெந்த சீரியல் தெரியுமா?
இனியாவை தொடர்ந்து திருமணத்திற்கு ரெடியாகும் ராதிகா மகள்! மணக்கோலத்தில் வெளியான காணொளி இணையத்தில் வைரல்....

பாக்கியலட்சுமி சீரியல் கடந்த 5 ஆண்டுகளாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு மக்கள் மனங்களை கவர்ந்த பிரபல சீரியல் ஆகும்.
இதையும் படிங்க: "வாழ்நாள் முழுவதும் சந்தோஷமா பாத்துப்பேன்" - நடிகையுடன் திருமணம் குறித்து பேசிய விஷால்.!!
இந்த தொடரின் மையக் கருவாக பெண்கள் எதிர்கொள்ளும் சமூக சவால்கள், குடும்ப உறவுகளில் ஏற்படும் மாமியாரின் கொடுமைகள் போன்றவை அமைந்துள்ளன. இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளன.
பாக்கியாவின் வாழ்க்கையில் புதிய திருப்பம்
தனது பெத்த மகளின் வாழ்க்கைக்கு அர்ப்பணமாகி கனவுகளை தியாகம் செய்த பாக்கியா, தற்போது தன்னுடைய தனியார் ஹோட்டலை திறந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
ஒரு பக்கம் பாக்கியா தனது வாழ்க்கையில் முன்னேறி வரும் நிலையில், அவரது மகள் இனியா தன்னுடைய வாழ்க்கையை வாழாமல், ‘அம்மாவின் கனவுகளை நாங்கள் கலைத்துவிட்டோமா’ என்ற எண்ணத்தில் வருத்தத்தில் மூழ்கியிருக்கிறார்.
மயூராவின் மணக்கோலகாட்சி காணொளி வைரல்
இந்நிலையில், கோபியின் இளைய மகளாக சீரியலில் நடிக்கும் மயூரா, திருமண ஆடையில் உள்ள காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவின் மகளாக நடித்து பிரபலமான மயூ, தற்போது எதிர்நீச்சல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்த தொடரில் தர்ஷன் என்ற பாத்திரத்துடன் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதற்காக படமாக்கப்பட்ட மணக்காட்சி காட்சி, ரசிகர்களிடையே ‘இனியாவுக்குப் பிறகு மயூராவுக்கும் திருமணமா?’ என்ற அதிர்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த காணொளி இணையத்தில் பகிரப்பட்டவுடன், குழந்தை திருமணத்தைப் போல தோன்றுகிறது என பலர் கருத்துகள் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அட இது தெரியாம போச்சே.. இயக்குனர் அட்லீக்கு விரைவில் டாக்டர் பட்டம்.!